ஜமீன் வீட்டு ஆட்டுக்குட்டியை தூக்கிட்டு போய் கறி வச்சுத்தின்னுட்டாம் சூச்சன். விஷயம் வெளிய வராம இருக்குமா? வீட்டுல வச்சு வெட்டுனா தெரிஞ்சுரும்னு ரெண்டு மூணு மைலு தூரமா இருக்குத பாறைக்கு பின்னால போட்டு ஆட்டை வெட்டியிருக்காம்.
கூட அவன் அண்ணமாருவோளும், தம்பிமாருவோளும். சாரயத்தை குடிச்சுட்டு அங்ஙனயே கறிவச்சு நல்லா தின்னுட்டாவோ. இதை அங்க ஆடு பத்திட்டு வந்த பய பாத்திருக்காம். அவனும் நல்ல பய. இதை போய் ஜமீனுகிட்ட சொல்லலை. ஆனாலும் சூச்சன் மேல சந்தேகம் வந்துட்டு ஜமீனுக்கு. அவருக்கு சந்தேகம் வந்தா விடுவாவுளா? தொழுவுல போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்காவோ. பய வாயவே தெறக்கலை. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னுட்டாம்.
ஜமீனு இவன் எங்க வச்சு ஆட்டை வெட்டி, தின்னாம்னு தெரிஞ்சுகிட்டு, பாறைகிட்ட கூட்டிப் போனாரு.
இங்கதானல நீ ஆட்டை வெட்டி, கறிவச்சு தின்னே’ன்னு கேட்டாரு. இவன் இல்லைங்குத பல்லவியை பாடியிருக்கான்.
அங்ஙன வச்சு, கன்னத்துலயே போட்டாரு. கீழ விழுந்தான் பாறைக்கு முன்னால. ஜமீன் குதிரை வண்டியில இருக்குத அருவாளை எடுக்க போயிருக்காரு, இவனை வெட்ட. திடீர்னு பாத்தா, விழுந்து கெடந்த பயலை பாறை உள்ள இழுத்துட்டு.
ஜமீனுக்கு ஒரே அதிர்ச்சி. பாறை இப்படி இழுத்துட்டேன்னு. கூட வந்திருந்த ஆட்களுக்கும் ஆச்சரியம். அந்தானி, முடிவு பண்ணுனாவோ. பொய் சொன்னா இந்த பாறை உள்ள இழுத்துக்கிடும்னு. இதுகிட்ட யாராவது போனா பேசவே மாட்டோவோ. ஏதாவது சொல்லி அது பொய்யா இருந்தா பாறை இழுத்துக்கிடும்லா.
இன்னைக்கும் பாபநாசம் பக்கத்துல இருக்குத டானாவுல பொய் சொல்லாம் பாறை வெள்ளையா இருக்கு பாருங்க.
Sunday, June 29, 2008
அடையாத பாழ் -ஆடுமாடு
முத்தாண்டி புலவரு... முத்தாண்டி புலவருன்னு ஒருத்தரு. நல்ல பாடுவாரு. திருச்செந்தூர்க்காரரு. முருகனை மட்டும் பாடிட்டு இருந்தவருக்கு என்னாச்சோ தெரியலை, கால்போன போக்குல போயிகிட்டே இருக்க ஆரம்பிச்சாரு.
யாருகிட்டயும் போயு, வயிறு பசிக்கு, சாப்பாடு போடுனெல்லாம் கேட்ட மாட்டாரு. யாராவது குறிப்பறிஞ்சு கேட்டாதான் சாப்பாடு. யாரும் இவரை சரியா கவனிக்கலைன்னா சுள்ளுனு கோவம் வந்துருனம். அறம் பாடிருவாரு. அறம் பாடுனா எல்லாமே நாசமா போயிரும். அப்டியொரு ஆளு,
கால் போன போக்குல வந்தவரு, கீழாம்பூருங்கற ஊருக்கு வந்தாரு.
இந்த ஊரு என்னன்னா ஒரு காலத்துல போர் வீரங்க இருந்த ஊரு. அதாவது ஆண்மையூர்ங்கறது ஆம்பூரா மாறிபோச்சு. இங்க வீரர்கள் இருப்பாங்க. இந்த ஊர்லயிருந்து 15 கிலோமீட்டர் தூரத்துல, மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு. அங்க இருக்குத கொட்டுந்தளத்துலயிருந்து, முரசு கொட்டுவாங்க. அப்படி கொட்டுனா அந்த சத்தம் கேட்டு வீரர்கள் இங்கயிருந்து கொட்டுந்தளத்துக்கு கெளம்பி போகணும். அப்படியான ஊரு இது.
புலவரு ஊர்லயிருந்த கோயிலெல்லாம் பாத்துட்டு, ஐயமாரு தெருவுல நடந்து போயிட்டிருந்தாரு. சரியான பசி. 'இவருதான் பசிக்குது, சோறு போடுங்க"ன்னு கேக்க மாட்டாரே. ஒரு வீட்டு திண்ணையில சுந்தரம் ஐயருன்னு ஒருத்தரு உக்கார்ந்திருந்தாரு. அவருக்கு எதிர்ல பெரிய தோப்பு. அந்த ஐயரோட அண்ணன் தம்பி, சொக்காரங்களுக்கானது. அதுல ஒரு பாதியை பங்களா மாதிரி கட்ட, செங்கலு, மண்ணெல்லாம் அடிச்சு போட்டிருந்தாங்க. புலவரு, அந்தப் பக்கம் நின்னுகிட்டு, ஐயரு சாப்பிட கூப்பிடுவாருன்னு பாத்தாரு.
அவரு, 'யாரோ வெளியூரு காரர் போலிருக்கு, இங்க யாரையும் தேடி வந்திருப்பாரு'ன்னு நினைச்சுட்டாரு. புலவரை அவரு கண்டுக்கலை. அவருக்கு பசிக்குன்னு ஐயருக்கு எப்படி தெரியும்?. கொஞ்ச நேரத்துல புலவரு, ஐயரு இருந்த திண்டுல உக்கார்ந்தாரு. ஐயரு உடனே, 'எந்த ஊரு? யாரை பார்க்க வந்திருக்கேரு'ன்னாரு.
புலவரு, பதிலை சொல்லாம, 'எதிர்ல இருக்குத நிலத்துல என்ன பண்ண போறீங்க"ன்னு கேட்டாரு.
'பங்களா கட்ட போறோம்'னாரு ஐயரு.
உடனே ஒரு பாடலை பாடி, 'ஏழுசுந்தரம் பார்பட்டு பாழ் அடைவது என்னாளோ"ன்னு முடிச்சிருக்காரு. ஐயருக்கு அறம் பாடியிருக்காருன்னு புரிஞ்சுப்போச்சு.
'என்னய்யா இப்படி பாடிட்டே"ன்னாரு.
புலவரு, சும்மா அவரை பார்த்துட்டு, அவர் பாட்டுக்கு போயிட்டாரு. ஐயருக்கு கொழப்பம்.எப்படி ஏழு சுந்தரத்துக்கு இந்த எடம் இருக்குன்னு இவனுக்கு தெரியும்னு. உடனே தெருவுல இருந்த பிள்ளையாரை போய் கும்புட்டுட்டு, 'இதை நீதாம்பா பாத்துக்கணும்'னு வேண்டிட்டு வந்துட்டாரு. மறுநாள் பங்களா கட்டுததுக்கு ஆளுவோலாம் வந்துட்டாவோ. திடீர்னு பாத்தா ஏழு சுந்தரத்துல, உடம்பு சரியில்லாம இருந்த ஒரு சுந்தரம் போய் சேர்ந்துட்டாரு.
பெறவென்னா... இன்னைக்கு வரைக்கும் பாழ் இடம் பாழாவே இருக்கு. பக்கத்துல வீடு, கடைன்னு என்னென்னவோ மாற்றம் வந்தாலும், இந்த எடம் மட்டும் கட்ட முடியாம அப்படியே கெடக்குது.

முள்ளி மலை பொத்தை -ஆடுமாடு
கடையத்துல இருக்குத நித்ய கல்யாணி அம்மனுக்கு ஒரு அக்கா. அவா பேரு கல்யாணி. கடையத்துல இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்துல இருக்குத சிவசைலம்தான் இவா ஊரு. சொத்து சொகம்னு இருக்குத ரெண்டு பேருக்குள்ளயும் சின்ன மனச்சடவு. என்னன்னா கல்யாணிக்கு பிள்ளைலு இல்லை. நித்ய கல்யாணிக்கு நாலு பிள்ளைலு.
பொம்பளைக்கு பிள்ளைலுவோ இல்லைனா அது பெரிய மன வருத்தமாத்தான இருக்கும். இருந்தாலும் தங்கச்சி பிள்ளைலுவோளை அவ பிள்ளை மாதிரிதான் பார்த்துக்கிடுவா. தூக்கி வச்சு கொஞ்சுதது, சாப்பாடு கொடுக்கதுன்னு இருந்தா.ரெண்டு பேரு ஊருக்கும் ஏழு கி.மீட்டருதானே தூரம். இருந்தாலும் ஏகப்பட்ட வேலை இருந்ததால தங்கச்சி பிள்ளைல பாக்க முடியலை.
ரொம்ப நாளு கழிச்சு, நித்யகல்யாணி இருக்குத கடையத்துக்கு தங்கச்சிய பாக்க வந்தா. இவ வாரத கேள்விபட்ட நித்ய கல்யாணி, நம்ம குழந்தைகளை பாத்தான்னா என்னமும் நினைப்பாளோன்னு யோசிச்சுட்டு, குழந்தைகளை ஒரு ரூமுக்குள்ள போட்டு பூட்டிட்டா. ரெண்டுபேரும் அம்மனுவோ. இந்த விஷயம் கல்யாணிக்கு தெரியாம இருக்குமா? தெரிஞ்சு போச்சு.
தங்கச்சிக்காரிட்ட, ‘என்னைய இப்படி நினைச்சுட்டியே சண்டாளி, ஒன் குழந்தைகள்லாம் கருகி போவும்’னு சாபம் விட்டுட்டு போயிட்டா.நித்ய கல்யாணி பதறி போயி, குழந்தைகளை அடைச்சு வச்சிருந்த ரூமை திறந்து பாத்தா. அவ்வளவுதான். அவளுக்கு மூச்சு பேச்சில்லை. சாபம் விட்ட மாதிரியே குழந்தைகள்லாம் கருகி போச்சு.
பதறியடிச்சுட்டு அக்காட்ட ஓடுனா நித்ய கல்யாணி. அவா காலை புடிச்சுட்டு, ‘என்னை மன்னிச்சுக்கோ; தெரியாம நடந்து போச்சு. என் கொழந்தைகளை காப்பாத்து’ன்னு கதறினா. என்னத்த இருந்தாலும் தங்கச்சியில்லையா? சரின்னு கொழந்தைகளை காப்பாத்திட்டா.
அந்தானி சொன்னா;‘இனும நீயும் நானும் பாத்துக்கிடவே வேண்டாம். உன் மூஞ்சியிலயே முழிக்கவே மாட்டேன். இங்கியிருந்து பார்த்தா உன் வீட்டுல விளக்கெறியது தெரியும். நீ அங்கயிருந்து பாத்தா இங்க வெளக்கு எரியது தெரியும். இனும அது தெரியாது’ன்னு சொல்லிட்டு கொஞ்சூண்டு மண்ணை நுள்ளி வீசுனா, அது பொத்தையா வளந்து நின்னுச்சு.
இப்பவும் கோயிந்தபேரி பக்கத்துல இந்த மலை இருக்கு. நுள்ளி வீசுனதால இதுக்கு இந்தப் பெயரு. அது வழக்கு மாறி மாறி, இப்ப ‘முள்ளி மலை பொத்தை’ன்னு ஆயிப்போச்சு.

Subscribe to:
Posts (Atom)