http://dubukku.blogspot.com/2007/05/blog-post_16.html
நீ கல்யாணி தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...
என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்
நீங்க தான் காண்டிராக்ட்டா...காசியாத்திரை குடை சின்னதா இருக்கே...நல்ல பெருசா வாங்க வேண்டாமா...பட்டுப் பாயெல்லாம் நல்ல வாங்கியிருக்கேளா...காட்டுங்கோ பார்க்கட்டும்
ஏன்டா அந்தப் பையனோட ஏடாகூடமா பேசிண்டு இருந்தியா சித்திப்பாட்டி வந்து உம்பிள்ளை இந்த வயசுலயே பம்பாய் செக்ஸப் பத்தி பேசிண்டு இருக்கான்னு குண்டத் தூக்கிப் போட்டுட்டு போறா?
ம்ம்..அந்த குண்டத் தூக்கி உன் சித்திப்பாட்டி மண்டையில போடு பாம்பே சென்செக்ஸும் ஒரு விதமான செக்ஸுன்னு நினைக்கிறா பாரு....இந்த வயசுல அந்தக் கிழத்துக்கு இதெல்லாம் தேவையா..ஓரமா உட்கார்ந்து ராம ராம சொல்லச் சொல்லு புண்யம் கிடைக்கும்
எத்தன தடவை சொன்னேன் இந்தப் புடவை வாங்காதேன்னு ...உன் கலர் கம்மியா காட்டறதுன்னு...அங்க பாரு எல்லாரும் எப்படி ஜம்முன்னு வந்திருக்கான்னு..அந்த பச்சைக் கலர் புடவை சூப்பரா இருக்கு இல்ல், இந்த மெருன் கூட ரொம்ப நல்லா இருக்கு....அந்த பர்பிள் அடிச்சிக்கவே முடியாது அம்சமா இருக்கு
போதும் போதும் புடவைய கிரிட்டிசைஸ் பண்றேன்னு எல்லாரையும் நைசா பார்த்து ரசிச்சது...புடவை தான் நீங்க சொன்னத வாங்கலையே தவிர உங்களுக்கு பிடிச்ச செருப்பு தான் போட்டுண்டு வந்திருக்கேன்
அட போடா ஒன்னும் தேற மாட்டேங்குது...போனவாரம் ஒரு குஜ்ஜூ கல்யாணத்துக்கு போயிருந்தேன்...புடவைய கட்டினா கூட மாராப்ப அந்தப் பக்கமா போட்டு என்ன ஸ்டைலு....இட்லி இட்லிதான் சப்பாத்தி சப்பாத்தி தான்..துக்டா துக்டாவா போட்டுக்கிட்டு பாட்டென்ன ஆட்டமென்ன பட்டயக் கிளப்பிருச்சில்ல..எல்லாரையும் கட்டிப்பிடிச்சி இல்ல வரவேற்கிறாங்க...இதமாதிரியா வணெக்கெம்ம்ம்ம்ம்ன்னு கையக் கூப்பிறாங்க..
மாமி உங்களுக்கு மடிசார் கட்டிவிடத் தெரியுமா...சித்த கல்யாணப் பொண்ணுக்கு கட்டிவிட்டுங்கோளேன்...யாரோ கட்டிவிட்டு துணியடைச்ச சோளக்கொல பொம்மை மாதிரி இருக்கா...
ஏன்னா அங்க ரூம்ல இருக்காளே அதான் என்னோட ஒன்னு விட்ட அத்தை
நினைச்சேன்...அடேயெங்கப்பா...உருளக்கிழங்கு போண்டாவ தின்னுட்டு....அங்க அடிச்ச கப்புக்கு உங்க அத்தை ஒன்னு விட்டிருக்கமாட்டாங்க ரெண்டு மூனு விட்டிருக்கனும்...என்னா நாத்தம்டா சாமி...மனுஷன் மூக்கு மசிரெல்லாம் கருகிப் போச்சுல்ல...
சீ...நான் என்ன சொல்றேன் நீங்க என்ன..பேசறீங்க அத்தை காதுல விழுந்திடப் போகுது.
என்ன...மாப்பிள்ள என்னைப் பத்தி ஏதோ சொல்றார் போல இருக்கே...
இல்ல...நான் இல்ல அத்தை உங்க பொண்ணு தான்...- இது தான் எங்க 'ஒன்னு' விட்ட அத்தை...'ஒன்னு' விட்ட அத்தைன்னு உங்களப் பத்தி மண்டபம் ஃபுல்லா நாற அடிக்கிறா..
மாப்பிள்ளை ரொம்ப தமாஷ் பேர்வழிபோல இருக்கே...இருக்கட்டும் இருக்கட்டும்ஆமாமா இருகட்டும்...இருக்கட்டும்.அத்தை எதுக்கும் நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்கோ....
ஏன்டா கிச்சு உன்னை எங்கெல்லாம் தேடறது....மாப்பிளை இந்த பிராண்டு செண்ட் தான் யூஸ் பண்ணுவாராம் ஓடிப் போய் ஸ்பென்சர்ல வாங்கிண்டு வந்திரு
அடப்பாவிங்களா...ஸ்பென்சர் வரைக்கும் கிச்சு ஓடனுமா.....ஏன்டி உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு தண்ணில ரெண்டு சொட்டு பன்னீர விட்டு லோக்கல் பாட்டில்ல அடைச்சு வைச்சு செண்டுன்னு ஏமாத்தினீங்களே அதெல்லாம் இப்போ இல்லையா...திருந்திட்டீங்களா...
இங்க மாப்பிள்ளைய பார்த்தீங்கல்ல...எல்லாம் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி தான் வைப்போம்... உங்க மூஞ்சிக்கு பன்னீர் பாட்டிலே ரொம்ப அதிகம்.
ஏம்பா வேஷ்டி கட்டிக்கோ...கட்டிக்கோன்னு படுத்தற நீ பாட்டுக்கு கட்டி விட்டுறுவ அவுந்தா அப்புறம் உன்னை நான் எங்க தேடறது? இதே மாதிரி படுத்தினியான்னா அப்புறம் ஒன்னு விட்ட அத்தைகிட்ட மாட்டிவிட்டுறுவேன்.
சார் அங்க மாப்பிள்ளை சொந்தக்கார ரூமுக்கு அனுப்பின காப்பில சர்கரையே இல்லையாம்...கொஞ்சம் பார்த்து சொல்லி அனுபுங்களேன்...
நம்ப மல்லிகா புள்ளை அமெரிக்கால இருக்கானாம் வரன் பார்த்திண்டு இருக்கா...ரொம்ப நல்ல பையன்..கை நிறைய சம்பளம்.அமெரிக்கால அவாத்து கொல்லைக்கதவ திறந்தா புஷ்ஷோடு ஆம் தெரியும்ன்னா பார்த்துக்கோங்கோளேன்...நம்ப வசுந்த்ரா ஜாதகத்தை தாங்கோ நானாச்சு முடிச்சுவைக்கிறேன்.
ஏன்டி பர்ஸ்ட் நைட்டு ஹோட்டல்லயாமே...ரொம்ப நன்னா டெக்கரேட் பண்ணுவாளாமே...எங்க காலத்துல எங்களுக்கெல்லாம் வீட்டு மாடியிலதான்...அதுவும் நெல்லு மூட்டைய ஓரமா வெச்சுட்டு பூ போட்டு வைச்சிருப்பா..அங்க தான் எல்லாமே ஹூம்....
விசாலம்...பொண்ணுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்திருக்கியோ...பதவிசா நடந்துபாளொன்னோ..
பாட்டி அதெல்லாம் உங்ககாலம்....நம்ம ராது சும்மா புகுந்து விளையாடிடுவா..ஏண்டி ராது அப்படிதானே..?
போடா அந்தப் பக்கம்...பொம்மனாட்டிகள் இடத்துல ஆம்பிளங்களுக்கு என்ன வேலை...
என்னடா மச்சான் கல்யாணத்துக்கு கவனிக்கவே மாடேங்கிற வாட்டர் பார்டி ஒன்னும் கிடையாதா...
டேய் மெதுவா பேசுடா சித்தப்பா காதுல விழுந்திடப் போகுது ராத்திரி மொட்டைமாடில பசங்களோடு ஏற்பாடு ஆகியிருகுடா..கலக்கிடுவோம்...வாங்கி வைச்சாச்சில்ல...
ஏன்டா உன் சித்தப்பா ரொம்ப ஜாலின்னு நினைச்சேன்..ஸ்ட்ரிக்ட்டா?
போடாங்க...அவரு கவுத்தினார்னா உனக்கு பாட்டில் தான் மிஞ்சும்...மடாக் குடியன்டா கட்டுப்படியாகாது..பெருசுங்களலாம் தனியா போகுதுங்க...லூஸுல விடுடா...உளறிக் கவுத்திறாத
ஏன்டி சித்ரா உன் புருஷன் உன்னையே சுத்தி சுத்தி வராறே என்ன சொக்குப் பொடி போட்டு வைச்சிருக்க...
சித்ரா என்ன சொக்குப் பொடி போட்டான்னு நான் சொல்லட்டுமா...&(*£&£&^&£^%&!^ !&"!^"^ &*£&%£$£^& £*"^! %£&£^%&$*$^ ^$!^"%!"&
இப்படித் தான் போன தரம் உஷா ஊட்டி டூருக்கு போன போது..&"*(*&"£(*(&£ $$"£^^!^"*&& ஏன்டி உஷா அந்தக் கதைய சொல்லேன்...
ஏன் எனக்கு உங்க கதை தெரியாதே....இவ டெய்லி &*&£&**!*" ^*&!&"*!"& %&^^&*!^"*& ^&&^!*
எல்லா ஆம்பிளங்களும் இப்படி தான் &£(£&£&$&^$&**!*&£&!&&"
எந்தக் காலத்துலடி இருக்க இப்போல்லாம் &*&**"&*£"& &£ ^$&& $*$£ £$$!££$" £&£&$&^$&**!*&
%^*&£^£&&£ பொண்ணுங்களுக்கு&&*&£ காலம்பற &&(*£"(*^£&
ஏன்டி கல்யணமான பொண்ணுங்க மாதிரியாடி பேசறீங்க...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம..
ஏய் இவள யாருடி இங்க விட்டா...ஏய் நீ போய் உன் வயசு கல்யாணமாகத பொண்ணுங்களோடு போய் சைட் அடி போ இங்க எல்லாம் வராத....
ஏன்டி சுஜா அங்க அவாளுக்கெல்லாம் தலகாணி வந்திருக்கான்னு பாரு...இல்லைன்னா எடுத்துக் குடு..மசமசன்னு நிக்காத
ஏன் உன் சீமந்தப் புத்ரன எங்க...கூப்பிட்டு சொல்லவேண்டி தானே...
ஏன்டி ராகவ் நேத்திலேர்ந்து ஓடியாடி எம்புட்டு வேலை பண்ணினான்...இப்போ கூட ராதுவ கொண்டுவிடறதுக்கு கூடப் போயிருப்பான்..
ஆஹாஹா....ரொம்ப தேறிட்டமா...பாசத்துல மெகாசீரியல் அம்மாவையும் மிஞ்சிருவ...மண்டபத்து டெரெஸ்ல போய் பாரு உம்பிள்ளை சரக்கடிச்சுட்டு பிரெண்ட்சுகளோடு மிதந்துண்டு இருப்பான்...சே என்ன பொழப்புடா இது கிழங்களுக்கு தலைகாணியக் குடு போர்வையக் குடுன்னு...நானும் இனிமே பாட்டிலடிச்சிட்டு மட்டையாயிடப் போறேன்..
சத்தம் போட்டுத் தொலையாதடி..பாட்டி காதுல விழுந்திடப் போறது..
ஏன்டி ராது எல்லாம் நல்லபடியா நடந்துதுல்ல?...சந்தோஷமா இருந்தியா?
ம்ம்...என்னம்மா வெவஸ்தையே இல்லாம இதெல்லாம் கேட்டுண்டு...எம்பராஸ் பண்ணாத...
ஹேய் கல்யாணப் பொண்ணு வாம்மா கண்ணு..உன்னைத் தான் காலைலேர்ந்து தேடிக்கிட்டு இருக்கோம். மாட்னடி மவளே ..நீங்க போங்கம்மா நாங்க கேட்டுக்கிறோம். என்னாடி பையன் எப்படி..? தேறுவானா...?..கழுத்தக் காட்டு பார்ப்போம்..எங்கெல்லாம் என்ன பண்ணியிருக்கான்ன்னு பார்ப்போம்
ஏய் போங்கடி....உத படப் போறீங்க....
புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் பேக் பண்ணி தனித் தனியா டப்பால போட்டு இன்டிவிஜுவலா போட்டிருக்கோம். வழியில பஸ்ஸுலயே சாப்பிட வசதியா எல்லாத்துக்கும் ஸ்பூனும் போட்டிருக்கோம். வாட்டர் பாட்டிலும் இருக்கு. வசதியா இருக்கும்.
விசாலம் கண்ணு கலங்காத பொண்ண அனுப்பி வைக்கனும்...கடல் தாண்டி போறா, போற இடத்துல நன்னா இருக்கனும்..சிரிச்ச முகத்தோடு அனுப்பு...அதுவும் சின்னது நீ கண் கலங்கினா அப்புறம் அதுவும் கழுத்த கட்டிண்டு அழும்.
அழாத ராது...ப்ளைட் ஏறறதுக்கு நாங்க ஏர்போட்டுக்கு வருவோம்... என்னென்ன ஊருக்கு எடுத்துண்டு போகனும்ன்னு அப்புறம் வாக்கா சொல்லு அம்மா பேக் பண்ணி வைக்கிறேன் என்ன
இதுல அப்பளம் வைச்சிருக்கேன்...ராகவ் பிரெண்டு அங்க தான் எம்.எஸ் பண்றானாம் வந்து பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கானாம். அடிக்கடி ஃபோன் பண்ணு என்ன...யாராவது வந்து போறதான்னா சொல்லு எதாவது குடுத்துவிடறேன்....உடம்ப பார்த்துக்கோடி வேளா வேளைக்கு சாப்பிடு என்ன...
டேய் ...அந்த ப்ரீத்தி பின்னாடியே துப்பட்டாவ பிடிச்சிண்டு சுத்திண்டு இருக்காத ஒழுங்கா படி என்ன...சீகிரமே நீயும் அங்க வந்திரு...என்ன..
அம்மா இங்க இப்ப ஒரே குளிர்..நீ இங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் சிண்டு உன்ன ரொம்ப தேடறான்...அடிக்கடி ஏங்கி ஏங்கி அழறான்.....ஜூன்ல நாம ராகவ் மாமா கல்யாணத்துக்கு போறோம்ன்னு சொல்லி சமாதானம் பண்ணி வைச்சிருக்கேன்..
நீ ராது தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...
என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்
Wednesday, July 9, 2008
வங்கி தேர்வு - நடந்தது என்ன? - அம்பி
நீங்கள் எப்போதாவது இந்த வங்கி தேர்வுகள் ஏதேனும் எழுதியதுண்டா? ஆம்! எனில் மேற்கொண்டு படியுங்கள். இல்லையெனில் என்னவென்று தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.(அவ்ளோ லேசுல விட்ற மாட்டோம் இல்ல).
80-90களில் வங்கியில் வேலை செய்வது என்பது பலருக்கு ஒரு லட்சிய கனவாகவே இருந்தது. பிஎஸ்ஆர்பி(BSRB) என்ற வார்த்தை மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட காலம் அது. அந்த போட்டி தேர்வுக்கு ஏதோ அலங்க நல்லூர் ஜல்லிகட்டுக்கு காளையை தயார் செய்வது போல சிலர் பத்தாவதில் இருந்தே தம் மக்களை தயார் செய்தவர்களும் உண்டு.
கணக்கில் ஆழ்ந்த அறிவு, நுண்ணிய லாஜிக்கல் அறிவு, ஊறுகாய் போல கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் ஞான பழம் எனக்குத் தான்!னு சொல்லி விடலாம். கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.
1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.
2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.
3) ரூம் போட்டு யோசித்து ஐந்தாண்டு திட்டத்தை நேரு தீட்டியதால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளை பத்தி ஒரே பீட்டரா எடுத்து விடு - இது ஆங்கில அறிவை சோதிக்க ஒரு வழிமுறை.
இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் எல்லாம் அனல் பறக்கும் பயிற்சிகள் அளித்து வந்தன. கேள்விக்கான விடைகள் ஏ/பி/சி/டி தான் (டிபிசிடி இல்லை). எங்க ஊரில் இவ்வகை வகுப்பு ஒன்று ரொம்பவே பிரசித்தம். நெல்லை மாவட்டத்திலேயே எங்க ஊரில் உள்ள அந்த குறிப்பிட்ட வகுப்பில் பயிற்சி எடுக்கவென்றே பலர் தங்கி படித்த காலங்களும் உண்டு. உங்க ஆட்கள் கொஸ்டின் பேப்பரை லவட்டி விடுவீர்களோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட பயிற்சிகள் தான்.
இவ்வகை தேர்வு மையங்கள் பெரும்பாலும் பெரு நகரத்தில் உள்ள கல்லூரிகளாக தான் இருக்கும். பையங்கள் எல்லாம் ஏதோ ஜாலி டூர் போவது போல போவார்கள். பெண்கள் தேர்வு எழுத கிளம்பினால், உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த வேட்டியும், முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளை சட்டையுடன் அப்பாவோ, தம்பியோ (வெட்டியாக இருக்கும் பட்சத்தில்) முந்தைய நாளே மஞ்சபையுடன் கூடவே கிளம்பி விடுவார்கள்.முப்பிடாத்தி அம்மன் கோவில் குங்குமம், அதற்கு மேல் திருனீறு, பின் ஒரு சாந்து பொட்டு, அதற்க்கு மேல் வீட்டின் பெரியவர்கள் யாரேனும் இட்டு விட்ட வெற்றி திலகம் சகிதமாக தேர்வு மையத்துக்கு ஒரு ஸ்பெஷல் எபக்டோடு வருவார்கள்.
வாம்மா மின்னல்! இது எத்தனையாவது படையெடுப்பு?னு ஏதேனும் ஒரு பையன் சவுண்டு விட்டா, பதிலுக்கு வெள்ளை வேட்டி விடும் சவுண்டுக்கு ஏரியாவே அதகளபடும். தப்பிச்சோம்! பிழைச்சோம்!னு அந்த பையன் எக்ஸாம் எழுதாமலேயே எஸ்ஸாகி விடுவான்.
சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன். நல்ல வேளை தேர்வாகவில்லை, பேங்குல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத/படிக்க முடியுமோ?
இனிமே இவ்வகை தேர்வுகளுக்கு ஹால் டிக்கட்டுடன் பணம் கட்டிய ரசீது, ரசீது தந்த காஷியரின் பெயர், முகவரி, அவருக்கு எத்தனை குழந்தைகள்? போன்ற விபரங்களும் தெரிந்து கொண்டு போகனும் போலிருக்கு. அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், நிஜமான சமீபத்தில் (போன வாரம் தான்) இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.

அப்பாவும் மகனும் ! - கோவி.கண்ணன்
மூன்று வயதுவரை தாய்ப்பால் எனக்கு,
மூன்றே மாதத்தில் புட்டிப்பால் உனக்கு !
பாசத்தின் தாலாட்டில் தூங்கினேன் நான்,
பணிப் பெண்ணுக்கு பயந்தே தூங்கினாய் நீ !
ஐந்து வயதில் ஆரம்ப பள்ளி எனக்கு,
தவழ்ந்த வயதில் பாலர்பள்ளி உனக்கு !
கரும்பலகையில் கைவலிக்க எழுதிபடித்தேன் நான்,
கணனியில் விரல் வைத்து வியக்க வைத்தாய் நீ !
கோலி, கில்லி, பரமபதம் விளையாடினேன் நான்,
கேம்பாயும், வார்கிராப்ட் புகுந்து விளையாடுகிறாய் நீ !
நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,'
கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ !
அன்று தீப்பெட்டி தொலைபேசி எனது,
இன்று வீடியோ சொல்போன் உனது !
தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !

Monday, July 7, 2008
தலை மலை அய்யன் - ஆடுமாடு
ஊர்ல மழைதான் முக்கியம். வெவசாயத்துக்கு அதுதான உயிரு. எட்டு மாச கோடையில மழை வாரது கஷ்டம்தான். வெவசாயிவோ திக்குமுக்காடி போவாவோ. ‘இப்ப மழை வந்தா பயிருலாம் பொழச்சுக்கிடுமே’ங்குத நெலமை வந்தா, ஊருல இருக்குத ஐயமாருவோ வூட்டுக்கு வெஷயம் போவும்.

நாலாவது நாளுலேயே சில சமயத்துல மழை பெஞ்சுரும். அஞ்சு நாளு வரைக்கும் மழை பெய்யலைன்னு வையுங்கோ. கோயிலுக்கு வெளியில இருக்குத சாமி செல மேல ( கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில வந்தாருங்கதுக்கு கதை இருக்கு) அந்த பச்ச மௌகாயை அரைச்சு, சாமி செல மேல பூரா பூசிருவாவோ. அந்தானி, எல்லாரும் அவ்வவ்வோ வூட்டுக்கு போயிருவாவோ. மௌகா பூசுன 24 மணி நேரத்துல மழையை கொண்டு வந்திருவாரு சாமி. இதனால தலை மலை அய்யன்னு சாமிக்கு பேரு.
கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில இருக்காரு? அந்த கதைய கேளுங்க.கோடையிலயெல்லாம் ராமநதில தண்ணி வத்திபோவும். அணையில கொஞ்சமாத்தான் தேங்கி கெடக்கும். அணைக்குள்ள இறங்கி மேற்காப்ல போனா மலை. அந்த வழியாதான் எல்லாரும் வெறவு வெட்டிட்டு வருவாவோ.
ஒரு நாளு, புள்ளதாச்சி பொம்பளை ஒருத்தி வெறவு வெட்ட போயிருக்கா. போற வழியிலேயே அவளுக்கு வயித்து வலி வந்துட்டு. என்ன பண்ணன்னு தெரியாம, உக்காந்து வயித்தை புடிச்சுட்டு அழுதிருக்கா. பின்னால வந்த இன்னொருத்தி, இங்ஙன இருந்து இவளுக்கு எப்படி பெரசவம் பார்க்கன்னு யோசிச்சிருக்கா. அந்தானி, ஆபத்துக்கு பாவமில்லைன்னு கோயிலுக்குள்ள அவளை கூட்டிட்டு போயிட்டா. அங்ஙனயே பெரசவம் நடந்திருக்கு.
இதை பாத்துக்கிட்டு சாமி அங்க இருக்க முடியுமா? சாமி வெளியில வந்து உக்காந்துட்டாரு. பெரசவம் நல்லபடியா நடந்து அவளும் பிள்ளைய தூக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா. ஆனா சாமி மட்டும் உள்ள போவாம வெளியிலயே உக்காந்திகிட்டாரு. இதுதான் சாமி கோயில விட்டு வெளிய வந்த கதை.கடையம் பக்கம் போனீங்கன்னா, ராமநதிக்குள்ள இருக்குத, இந்த தலை மலை அய்யனை பார்த்துட்டு வாங்க.

Tuesday, July 1, 2008
புளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அமைந்திருப்பது கட்டப்பெட்டு கிராமம். இங்கு நாகராஜ் என்ற ஏழு வயது சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன் தினம் பள்ளிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் மீது இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்குதல் தொடுத்து இருக்கின்றன. பயத்தால் இரு கை-கால்களையும் மடக்கி குன்றித் தரையில் மடிந்து கொண்ட இச்சிறுவனை தலை முதல் கால் வரை கடித்து குதறியிருக்கின்றன. துடித்து கதறியிருக்கிறான் சிறுவன். அவனது கதறலைக் கேட்ட பொதுமக்கள் ஒன்று கூடி கல்லால் அடித்தும், பெருஞ்சப்தம் எழுப்பியும் நாய்களை விரட்டியடித்திருக்கின்றனர்.
தனியார் மருத்துமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இச்சிறுவனுக்கு இதுவரை உடலில் 400 தையல்கள் போடப்பட்டுள்ளன. அதிகளவில் சிறிய காயங்களும் உள்ளன என்றும் அவற்றுக்கு இன்னும் 200 தையல்கள் வரை போட வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காயங்களில் வைரஸ் கிருமிகள் அதிகளவில் உள்ளதால் அவற்றை அழித்துவிட்டு பிறகு தையல் போடும் வேலையில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். குன்னூரில் மழைக்காலத்து கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சிறுவனுக்கு ஜன்னி ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கு கண்கானிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
இந்தப் பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு சமீப காலங்களில் அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். நாளொன்றுக்கு 2 முதல் 3 போர் வரை நாய்கடிக்கு ஆளாகின்றனர். அதாவது மாதமொன்றுக்கு சராசரியாக 60 முதல் 90 போர் வரை. கடந்த வாரமும் கூட ஒரு மருத்துவர் மீது இந்நாய்கள் பாய்ந்ததில் கை கால்கள் என பல இடங்களில் கடி வாங்கியிருக்கிறார்.
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு நகராட்சியினால் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அந்த நாய்களே மீண்டும் குட்டி போட்டு பல்கிப் பெருகி உள்ளன. எனில், இதில் ஏதோ முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த தெருநாய்களை எப்படியாவது ஒழித்து தங்களை காத்தளிக்கும்படி மன்றாடி வருகின்றனர் இப்பகுதி மக்கள். மயக்க ஊசி போட்டு நாய்களை கொல்ல முயற்சி எடுத்த நகராட்சியை கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது புளு கிராஸ் அமைப்பு.
புளு கிராஸ் அமைப்பின் செயல்பாடுகளில் எள்முனை அளவிற்கும் அதிருப்தியிலை நமக்கு , அதன் மகத்தான சேவையினை உண்மையிலேயே பலமுறை வியந்து பாராட்டி இருக்கிறேன். ஒரு முறை விபத்தொன்றில் சிக்கிய தெரு நாய்குட்டியினை பார்த்து பதறிப்போய் புளு கிராஸ் அமைப்பிற்கு தொலைபேசித் தகவல் தெரிவித்ததில், சடுதியில் ஆம்புலன்ஸ் வண்டியில் வந்து நாயை எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து பின்னர் ஒரு மாதங்கழித்து அதே இடத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இதனை கண்ட இப்பகுதி மக்கள் அது முதல் எங்கள் பகுதியில் நாய், பூனை இவைகள் எங்கு துன்பத்தில் சிக்கினாலும், உடனே என்னிடம் வந்து தகவல் தெரிவிப்பார்கள். நானும் புளு கிராஸ் அமைப்பினை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிப்பேன். இது போன்ற நேரங்களில் புளு கிராஸ் அமைப்பின் மேலான சேவை பாராட்டுக்குரியது.
ஆனால் தற்போது நீலகிரி மாவட்ட விஷயத்தில் தீர்வு என்னவாய் இருக்க முடியும்? அவற்றுக்கு மீண்டும் 'தரமுள்ள' கருத்தடை செய்யலாம் தான். இப்போது இருக்கும் நாய்களை என செய்வது? கட்டுக்கடங்காமல் சென்று விட்ட நாய்க்கூட்டத்தினமிருந்து பொது மக்களையும், குழந்தைகளையும் எங்ஙணம் காப்பது? ஊசி போட்டு அவைகளை கொன்றழிப்பதில் புளு கிராஸ் அமைப்பிற்கு உடன்பாடில்லாமல் போனால், அந்நாய்க்கூட்டத்தினை கவர்ந்து சென்று ஓரிடத்தில் வைத்து அவர்களே பராமரித்துக் கொள்ளட்டும். அல்லது உரிய தீர்வினை அவர்களையே முன்வைக்கச் சொல்லலாம்
இப்பதிவினை கண்ணுறும் சகோதர சகோதரிகள் பலரும் பல நாடுகளில் உள்ளீர்கள். உங்கள் பகுதி அனுபவத்திலுள்ள அல்லது உங்களுக்கு தோன்றும் தீர்வினை முன்வையுங்கள். இந்த பிரச்சனை நீலகிரியில் மட்டுமல்ல நம் நாட்டில் அநேக இடங்களில் உள்ளன.
இப்போதைக்கு நீலகிரி பகுதிக்கு எனக்கு தோன்றும் தீர்வு -- நாய்களை ஊசி போட்டு கொல்வது மட்டும் தான். வேறு வழியில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல பேர் பாதிக்கப்படுவர். தாமதம் கூடாது. கொல்லுங்கள் நாய்களை -- காப்பாற்றுங்கள் மக்களை.
புளு கிராஸ் அமைப்பினரே! நாய்கள் மீது வைத்திருக்கும் அன்பில் சிறிதளவு மனிதர் மீதும் வையுங்கள். 400 தையல் வாங்கிய அந்த சின்னஞ்சிறு பாலகனின் அலறல் சப்தம் இன்னுமா தங்களது செவிப்பறையில் வந்து மோதவில்லை ?????
Sunday, June 29, 2008
யானைக்கு சுளுக்கெடுத்த மடம் -ஆடுமாடு
ரெண்டு நாளா மாந்தோப்பு பக்கத்துல அரசன், படையோட இருக்காம். எங்கயோ போவ வேண்டியவன் இங்க எதுக்கு இருக்காம்னு புரியல. எதுக்கு என்னன்னு ஊர்லயும் யாருக்கும் தெரியல. இதை போய் அரசன்கிட்ட கேக்கவா முடியும்? போற வாரவோயெல்லாம் அவன் கோவத்துல இருக்காங்கத மட்டும் சொல்லுதாவோ. கீழ்ப் பக்கத்துல ஏழெட்டு யானையோ. மேல் பக்கம் குதிரைகளா இருக்கு. வீரர்கள்லாம் வேல் கம்பை வச்சுக்கிட்டு கூட்டமா இருக்காவோ. ஊர் பூரா என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காவோ.
வழக்கமா மேக்கு பத்துக்கு மாடு மேய்க்க போற பண்டார அண்ணாச்சி, இங்க என்ன நடக்குன்னு தெரியணுங்கறதுக்காக, இவங்க இருக்குத பக்கமா மாடு மேய்க்க போனாரு. ஊர்க்காரனுவோ முழுசா விசாரிச்சுட்டு வாடேன்னு வேற சொல்லிட்டானுவோ. சரின்னு கௌம்பிட்டாரு.
மாந்தோப்புக்கு உள்ள மாட்டை பத்திவுட்டுட்டு, இவங்க என்ன பண்ணுதாவோன்னு தூரத்துல நின்னுக்கிட்டு பார்த்தாரு. ஒரு யானை, கீழப் படுத்துக்கிடக்கு தும்பிக்கைய அங்க இங்கன்னு ஆட்டிக்கிட்டு. பக்கத்துல அரசன் உக்கார்ந்திருக்காரு. ஒரு ஆளு கையில பெரிய பெட்டிய வச்சுக்கிட்டு யானை கால்ல தடவி தடவி விடுதாரு. கால்ல கையை வச்சா யானை உதறுது. அந்தாளு யோசிச்சுட்டு நிக்கான்.
இவருக்கு ஒண்ணுமே புரியலை. அரசனுக்கு கோவம். பண்டாரத்துக்கு அங்க போவலாமா வேண்டாமான்னு குழப்பம். போனா அரசன் இங்க என்ன ஜோலின்னு கேட்டுட்டாம்னா?. அந்தானி பாத்துட்டே இருந்தாரு. ஒண்ணும் விளங்குத மாதிரி தெரியல. மனசுல தெரியத்தை வச்சுக்கிட்டு மெதுவா அரசன் இருக்குத பக்கம் போனாரு. இவரு வாரத பார்த்து நாலஞ்சு வீரனுவோ ஓடி வந்து தடுத்தானுவோ. இதை பாத்த அரசன், 'அவனை வர விடு'ன்னான். போனாரு பண்டாரம்.
'என்ன?'ன்னாரு அரசன்.
‘நான் மாடு மேய்க்கவன். எங்க ஊர்ல ரெண்டு நாளா இருக்கியோ. என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இங்க வந்தேன்'னு சொன்னாரு பண்டாரம்.
அரசன் மேலயும் கீழயும் பாத்தாரு.
‘இங்க படுத்து கெடக்கு பாரு யானை. இது மேலதான் வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் திடீர்னு படுத்துக்கிட்டு. என்னன்னு தெரியலை. யானையை எழுப்ப பக்கத்தூர்லயிருந்தெல்லாம் வைத்தியருங்க வந்தாங்க. முடியல. அதான் இருக்கோம்'ன்னாரு அரசன்.
‘இவ்வளவுதானா? நான் வேற ஏதோன்னு நினைச்சேன். நான் வேணா யானைய எழுப்பட்டுமா?'ன்னாரு பண்டாரம்.
‘நீ என்ன வைத்தியனா'ன்னு கேட்டாரு அரசன். இல்லைன்னான்.
‘பெறவு எப்படி எழுப்புவே'ன்னாரு.
‘இப்ப பாருங்க'ன்னு யானை பக்கத்துல போனாரு பண்டாரம்.
பக்கத்துல இருந்த வைத்தியன், ‘நானே போராடி பாத்துட்டேன். நீ என்னத்த பண்ணிருவே'ன்னாரு.
இவரு ஒண்ணும் சொல்லலை. பேசாம, யானையோட காலை பாத்தாரு. காலு கொஞ்சமா வீங்கி இருந்துச்சு. அந்த காலு இருக்குத பக்கத்துல ஆழமா குழி தோண்ட சொன்னாரு அரசன்கிட்ட. வீரர்கள் வந்து தோண்டுனாவோ. அந்தானி பெரிய கயிறை கொண்டு வந்து, யானை கால்ல கட்டுனாரு பண்டாரம். கயிறோட ஒரு நுனியில பாறாங்கல்லை கட்டி குழிக்குள்ள போட்டாரு. யானையோட காலு புழுக்குன்னு குழிக்குள்ள போச்சு. டக்குன்னு சின்ன சத்தம். சரியா போச்சு. கயித்தை அவுத்துவிட்டாரு பண்டாரம். யானை கெந்தி கெந்தி எந்திரிச்சுட்டு.
அரசனுக்கு சந்தோஷம் தாங்க முடியலை.
‘என்ன பண்ணுன"ன்னு பண்டாரத்துக்கிட்ட கேட்டாம் அரசன்.
‘மாடுவோ கால்ல சுளுக்கு வந்துச்சுன்னா இப்படி படுத்துக்கிடும் பாத்துக்கிடுங்கோ. அதுக்கு பண்ணுததைதான் இதுக்கு பண்ணுனேன்'ன்னாரு பண்டாரம்.
‘யானைக்கு சுளுக்கா?'
ஆமான்னாரு பண்டாரம்.
சந்தோஷம் தாங்காத அரசன், ‘இந்தா இந்த இடம் பூராத்தையும் நீயே வச்சுக்கோ'ன்னு சுத்தி தெரிஞ்ச இடத்தையெல்லாம் இவனுக்கு கொடுத்துட்டாரு.
விஷயத்தை ஊர்ல வந்து சொன்னாரு பண்டாரம். எல்லாரும் அந்த இடத்தை பாக்கதுக்கு வந்தாவோ. வந்து பாத்தா குழி தோண்டுன இடத்துல ஊத்து பொங்கி தண்ணி வருது!
எல்லாருக்கும் ஆச்சரியம். குடிச்சு பார்த்தா அவ்வளவு ருசி. பெறவு பக்கத்துல சத்திரம் மாதிரி கெட்டுனாவோ. அன்னையில இருந்து இந்த இடத்துக்கு யானைக்கு சுளுக்கெடுத்த மடம் பேரு. இப்பம் பக்கத்துல கருப்பசாமி பூடம் வந்துபோச்சு.
இன்னைக்கும் பண்டாரம் குடும்பத்து ஆளுவோ ஒவ்வொரு சித்திரை விசுவுக்கும் இங்க ஐநூறு பேருக்காவது அன்னதானம் போடுதாவோ.

சூலிபொத்தை -ஆடுமாடு
காட்டுக்குள்ள வீடு. பத்து பேரு குடும்பம், அங்க குடிசைய போட்டு விவசாயம் பாத்துட்டு இருக்கு. ஒரு இருவது வீடுவோ இருக்கும். மாணிக்கம் வீட்டுல ரெண்டு சமஞ்ச புள்ளைலுவோ. சுழியான பிள்ளைலுவோ. எடக்கு மடக்குன்னுதான் இருக்கும். ராத்திரிக்கு மேல வெளியில போவ கூடாதுன்னா இதுவோ அங்கதான் கெடக்கும். சேட்டைக்காரச்சியோ.
நாலாவது வீட்டுல இருக்குத பயலுக்கு மூத்தவ மேல கண்ணு. அரசல்புரசலா மாணிக்கத்துக்கு தெரிய வந்ததும் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாவோ. பய வேலைல சரியா இருந்தாம். கர்ப்பமாயிட்டா புள்ள. நெற மாசம் வந்ததும், கூட ஒத்தாசைக்கு தங்கச்சிக்காரி இருந்தா. ஒரு நாளு பகல்ல எல்லாரும் வய வேலைக்கு போயிட்டாவோ. தங்கச்சிக்காரியும் போயிட்டா. நெறமாச சூலி வீட்டுல படுத்துக்கெடந்தா. திடீர்னு வாசல்ல இருந்து சத்தம் ‘ஐயா’ன்னு.
இவ உள்ளயிருந்து, ‘யாரு’ன்னு கேட்டா.‘நான் சன்னியாசி. தவமிருந்துட்டு வந்திருக்கேன். தலை வாழை இல போட்டு சாப்பாடு போடணும்’னு கேட்டிருக்காரு.
இவா, இது என்னடா கூத்தா இருக்குன்னுட்டு, ‘வீட்டுல யாருமே இல்லையே’ன்னா
‘அதான் நீ இருக்கியே’.
‘நான் சூலி, என்னால சமைக்க முடியாது. வீட்டுல நீத்தண்ணிதான் இருக்கு, அத வேணும்னா தாரேன்’ன்னா.
‘ம்ஹ¨ம். நீ வந்து சமைச்சு தந்தாதான் நான் சாப்பிடுவேன்’ன்னு சாமியாரு அடம்பிடிச்சிருக்காரு.
‘அப்படின்னா நீரு இங்ஙன பட்டினியாத்தான் கெடக்கணும்; எங்க வீட்டுக்காரங்க வந்ததும் தருவாவோ’ன்னு இவளும் கிண்டலா சொல்லியிருக்கா.
‘என்னையே ஏளன படுத்துதியா, பாரு உன்னை’ன்னுட்டு வீட்டு வாசல்ல கண்ணை மூட்டிட்டு உக்காந்துட்டாரு.
இதுக்குள்ள வய வேலைக்கு போன எல்லோரும் திரும்பி வந்துட்டாவோ. வீட்டு வாசல்ல இருந்த சாமியாரை பாத்து, மாணிக்கத்துக்கு ஒண்ணும் புரியலை. மவா கிட்ட கேட்டாம்.அவ வெஷயத்தை சொன்னா.
இது என்ன வம்பா போச்சுன்னு கண்ணை மூடிட்டு இருந்தவரை, ‘யோவ் சாமியாரே... என் வீட்டு வாசல்ல யாம்யா இருக்கீரு’ன்னு முதுவுல கைய வச்சு ஆட்டுனாம் மாணிக்கம்.அவரு திடுக்குன்னு முழிச்சுட்டு, ‘என் தவத்தை கலைச்சுட்டியே’ன்னு கோவமா பாத்தாரு.
‘எங்க வந்து என்னய்யா பேசுதீரு; மொதல்ல எடத்தை காலி பண்ணும்யா’னு சொன்னாம்.
‘எல்லாருமா சேர்ந்து என் கோபத்தை கிளறிட்டீங்க. உங்களை...’ன்னு சொல்லிட்டு கண்ணை மூடி தெறந்த சாமியாரு... ‘நீங்க கல்லா போங்க’ ன்னு சாபம் போட்டாரு.
அவரு கையை நீட்டி சொன்னதுமே எல்லாரும் கல்லா போயிட்டாவோ. இன்னைக்கும் அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்குத காக்கநல்லூரு சூலி பொத்தையில, எல்லாரும் அப்படியே செல மாதிரி இருக்கத பாக்கலாம். பக்கத்துல வைக்கப் படப்பு, அம்மிக்கல்லு எல்லாம் செதஞ்சு போயி கெடக்கு.

Subscribe to:
Comments (Atom)